நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கட்சிகளுக்கு உரிமை உள்ளது – ஐகோர்ட்

neet case

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கட்சிக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற தெரிவித்துள்ளது. சமீபத்தில் சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு – நம் இலக்கு என்ற தலைப்பில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தில் கையெழுத்திட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நீட் ஒழிப்புக்கான கையெழுத்து இயக்கத்தை திமுக தொடங்கி இருந்தாலும், இதனை மாபெரும் மக்கள் இயக்கமாக தான் முன்னெடுத்து செல்ல வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். நீட் ஒழிப்பு போராட்டத்தில் அதிமுகவும் பங்கேற்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி இருந்து வெளியேறிய பின்னர் மாணவர்களின் உரிமைக்கு அதிமுக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றிருந்தார்.

மக்களவையில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற புகார்.! திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி விசாரணைக்கு ஆஜர்.!

இதனிடையே, நீட் ஒழிப்புக்கான கையெழுத்து இயக்கம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சங்களை முன்வைத்து, குற்றசாட்டுகளை கூறி வருகிறது.. இந்த சமயத்தில், நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு எதிராக வழக்கறிஞர் எம்எல் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கட்சிக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற தெரிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்பட்டது. வழக்கறிஞர் எம்எல் ரவி தொடர்ந்து வழக்கை வாபஸ் பெற்றதால் மனுவை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உணவு உதவித்தொகை அதிகரிப்பு.! அரசாணை வெளியீடு.!

பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்படுவதாக வழக்கறிஞர் எம்எல் ரவி வழக்கு தொடர்ந்திருந்தார். கையெழுத்து இயக்கத்தால் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார்? என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

நீட் விஷயத்தில் மத்திய அரசின் முடிவு மாணவர்கள் நலனுக்கு விரோதமாக அமைந்தால் வழக்கு தொடரலாம். உண்மைத்தன்மையை நிரூபிக்க ரூ.1 லட்சம் டெபாசிட் ஐகோர்ட் கூறியபோது வாபஸ் பெறுவதாக மனுதாரர் பதில் அளித்தார்.  பொதுநல வழக்குகளை தொடர வரம்பு உள்ளது. சமுதாய நலன் இருந்தால் பொதுநல வழக்குகளை ஏற்கலாம் எனவும் ஐகோர்ட் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்