ரூ.2000 நோட்டுகளில் 97% க்கும் அதிகமானவை திரும்பப் பெறப்பட்டுள்ளன.! ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), கடந்த மே மாதம் 19ம் தேதி நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அதோடு, ரூ.2,000 நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
பொதுமக்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை, நாட்டிலுள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் மாற்றி கொள்ளலாம் என்றும், அதனை செப்டம்பர் 30ம் தேதிகுள் மாற்றி வங்கிகளில் செலுத்துமாறும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. பின்னர் அது அக்டோபர் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கட்சிகளுக்கு உரிமை உள்ளது – ஐகோர்ட்
அதுவரை ரூ.2,000 நோட்டுகளை 20000 ரூபாய் வரையில் வங்கியில் கொடுத்து, வங்கி விதிப்படி அடையாள விவரங்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும், அதற்கு மேல் இருந்தால் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
அதோடு, பெட்ரோல் பங்குகள், போக்குவரத்து கழகம் என பல்வேறு நுகர்வோர் துறைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என அறிவுறுத்தபட்டது. அறநிலையத்துறையினர், கோவில் உண்டியல் காணிக்கைகளை எண்ணி ரூ.2000 நோட்டுகளை வங்கியில் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
திடீரென உயர்ந்த தங்கம் விலை! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட மே 19 அன்று ரூ.3.56 லட்சம் கோடியாக புழக்கத்தில் இருந்த ரூ.2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.0.10 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. இதன்படி, மே 19 அன்று புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளில் 97% க்கும் அதிகமானவை திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.