ஆளுநரின் இந்த நடவடிக்கை என்பது அநாகரிகத்தின் உச்சம் – சு.வெங்கடேசன் எம்.பி

suvenkadesan

சங்கரய்யாவிற்கு அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், ஆளுநரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வழுத்து நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை கண்டித்து, இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கலந்து கொள்கிறார். சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநரை கண்டித்து போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உணவு உதவித்தொகை அதிகரிப்பு.! அரசாணை வெளியீடு.!

அதன்படி, ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுக்க முயன்ற போலீஸ்காரர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘விடுதலை போராட்ட வீரர் தோழர் சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவது என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எடுத்த முடிவை ஏற்க மறுத்த ஆளுநரின் நடவடிக்கை என்பது அநாகரிகத்தின் உச்சம். விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவுப்படுத்துவதோ, கெளரவப்படுத்துவதோ இவர்களுக்கு உடன்பாடல்ல.

பாராளுமன்றத்தில் மோடி எதை செய்தாரோ அதைத்தான் பல்கலைக் கழகத்தில் இரவி செய்கிறார். தேச விடுதலையை காட்டிக்கொடுத்தவர்கள், அந்த வீர வரலாற்றை கண்டு நடுங்கத்தான் செய்வார்கள் என விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live - 18042025
Shine Tom Chacko
tamilnadu rain
sivakumar about Suriya
TVK Leader Vijay Speech
virender sehwag virat kohli Rajat Patidar
TVK Meeting