கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதி! பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பதிவு!

பாஜக மகளிரணி தேசிய தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா மற்றும் சட்டீஸ்கரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், சமீபத்தில் கோவை திரும்பினார்.
தெலுங்கானா மற்றும் சட்டீஸ்கரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிறகு கோவை திரும்பிய வானதி சீனிவாசனுக்கு தீவிர காய்ச்சலும், உடல் வலியும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோவை அவிநாசி சாலையிலுள்ள கோவை மெடிக்கல் சென்ட்டர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில், கொரோனா தொற்று காரணமாக கோவையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன், தற்போது காய்ச்சல் குறைந்துள்ளது. மற்ற அறிகுறிகள் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறேன் என்றும் நலமுடன் இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக கோவையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன் காய்ச்சல் குறைந்துள்ளது. மற்ற அறிகுறிகள் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறேன்.நலமுடன் இருக்கிறேன்.
Tested positive for COVID-19 and currently getting treated in Coimbatore.
— Vanathi Srinivasan (@VanathiBJP) November 2, 2023