தமிழகத்தை தொடர்ந்து கேரள அரசும் ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதலே ஆளும் திமுக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையேயான கருத்து மற்றும் மற்றும் நிர்வாக மோதல்கள் தொடர்ந்து வருகிறார். தமிழக அரசு நிறைவேற்றும் சட்ட மசோதா மற்றும் உத்தரவுகளுக்கு உரிய நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கைய்யெழுத்திட மறுக்கிறார் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் பல முறை முறையிட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 31-ஆம் தேதி, தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு, தமிழக அரசின் உத்தரவுகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஒப்புதல் அளிக்காமல் அதனை தாமதப்படுத்தி வருகிறார் என கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசை தொடர்ந்து, கேரளா அரசும் அம்மாநில ஆளுநர் ஆரீப் முகமது கான் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை.
8 மசோதாக்கள் ஆளுநர் ஆரிப் முகமது கானிடம் நிலுவையில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பஞ்சாப், தெலுங்கானா அரசுகள் சார்பில், ஆளுநர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளநிலையில், தற்போது தமிழ்நாடு, கேரளா அரசும் வழக்கு தொடர்ந்துள்ளது.