வரும் 15ம் தேதி வரை ரவுடி கருக்கா வினோத்தை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு!

karukka vinoth

கடந்த 27-ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முதல் வாசல் முன் பேரிகேட் (தடுப்பு) அருகில் கருக்கா வினோத் எனும் நபர் பெட்ரோல் குண்டு வீசினார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து மேலும் இரண்டு பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை கைப்பற்றினர்.

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், போலீசார் இவரிடம்  நடத்தி வரும் நிலையில், ரவுடி கருக்கா வினோத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்தின் 3 நாள் போலீஸ் காவல் முடிந்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பான விவரங்களை போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ள நிலையில், ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை வரும் 15ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்