திருத்தணியும் தென்குமரியும் தமிழ்நாட்டில் எளிதில் இணைந்துவிடவில்லை.! முதல்வர் நெகிழ்ச்சி பதிவு.!
1947இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு அனைத்து மாகாணங்களும் ஒன்றிணைக்கபட்டன. அதன் பிறகு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கும் வேலைகள் நடைபெற்றன. தமிழ் மொழி பேசும் மக்கள் அதிகம் இருக்கும் மக்கள் தங்கள் பகுதிகளோடு தமிழ்நாட்டோடு இணைய முற்பட்டனர்.
இதற்காக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக கேரளாவை ஒட்டியுள்ள பகுதியில் கன்னியாகுமரியும், ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதியில் சென்னையும், திருத்தணியும் என பல்வேறு பகுதிகள் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசித்து வந்தனர். அங்குள்ள மக்கள் பலர் போராட்டம் நடத்தி உயிர்நீத்து மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு மெட்ராஸ் மாகாணத்தோடு (தமிழ்நாடு) இணைய வேண்டும் என வலுவான கோரிக்கையை முன் வைத்தனர். 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது.
டிடிஎப் வாசனுக்கு ‘நிபந்தனை’ ஜாமீன்.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!
தமிழ்நாடு உருவாக உயிர் தியாகம் செய்த தியாகிகள் நினைவாக, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை ஆண்டு தோறும் தியாகிகள் தினமாக தமிழக அரசு அனுசரித்து வருகிறது. அன்றைய தினம் மொழிவாரி மாநிலமாக போராடிய தியாகிகளின் நினைவுகள் போற்றப்படும்.
அதே போல இந்தாண்டும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், நவம்பர் 1 இன்று எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள். திருத்தணியும் தென்குமரியும் இன்று தமிழ்நாட்டின் பகுதிகளாக இரு திசைகளில் திகழ்கிறதென்றால் அது எளிதில் நடந்துவிடவில்லை. எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற, தமிழ்நலம் மிக்க போராட்டத்தால்தான் நமக்குரிய பல பகுதிகளை மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் பெறமுடிந்தது. அத்தகைய மேன்மைமிகு தமிழ் தியாகிகளின் நினைவை மறவாது போற்றுவது நம் கடமை. என பதிவிட்டுள்ளார்.