தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு

Firecrackers

தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வேடிக்கை அனுமதி அளிக்கப்படும் என சுற்றுசூழல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி, தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டும், 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை.. வரும் ஞாயிற்று கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்.! அரசு அறிவிப்பு.!

இந்த அறிவிப்பை தொடர்ந்து, தீபாவளியன்று காற்றின் தரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. காற்று மாசு மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் வண்ணம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து, பட்டாசு வெடித்த சிலர் மீது மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்