தீபாவளி பண்டிகை.. வரும் ஞாயிற்று கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்.! அரசு அறிவிப்பு.!
வரும் நவம்பர் மாதம் 12 (அடுத்த ஞாயிற்று கிழமை) தீபாவளி பண்டிகை வர உள்ளதால் அன்றைய தினம் விடுமுறை. அதனால், வரும் வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று ரேஷன் கடைகளுக்கு வேலை நாள் எனவும், இந்த வாரம் அனைத்து நாட்களும் வேலை நாள் எனவும் உணவுத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக்த்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக உணவுத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில், வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி தின விடுமுறையினை முன்னிட்டு, அதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைக்க வேண்டும் எனவும்,
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு.!
இதன் பொருட்டு, வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும் திறந்து இருக்கும் எனவும், பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைக்க வேண்டும் என்பதால், ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் கடைகளில் உள்ள இருப்பை சரிபார்த்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவம்பர் 5 ஞாயிற்று கிழமை வேலை நாளை ஈடுகட்டும் பொருட்டு, அடுத்து ஏதேனும் ஒரு நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் அதற்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும் எனவும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தமிழக உணவுத்துறை குறிப்பிட்டுள்ளது.