அந்த படத்தை பார்த்த யோகி ஆதித்யநாத்தால் அழுகையை அடக்க முடியவில்லை – கங்கனா ரனாவத் பதிவு!
நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தேஜஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் உணர்ச்சிவசப்பட்டதாக கங்கனா இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தேஜஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை உத்தரப்பிரதேச உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து கண்டுகளித்தனர்.
இந்நிலையில், ‘தேஜஸ்’ திரைப்படத்தை பார்த்த உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் படம் பார்க்கும் போது அவரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என நடிகை கங்கனா தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், படத்தின் சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத், இது பெண்கள் அதிகாரம் பற்றி பேசும் படம் அல்ல, பெண்களின் பவர் பற்றிய படம் என்று கூறிஉள்ளார்.
இன்று லியோ வெற்றிவிழா கொண்டாட்டம்! ரசிகர்களுக்கு இறுதி நேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி…
இயக்குனர் சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் ரோனி ஸ்க்ரூவாலா தயாரித்த இந்த திரைப்படம் அக்டோபர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தத் திரைப்படம் விமானப்படை விமானி கதையை பற்றி விளக்குகிறது.
சீக்கிரம் முடிங்க வீட்டுக்கு போகணும்! படப்பிடிப்பில் அடம்பிடிக்கும் நயன்தாரா..செம கடுப்பில் படக்குழு!
படம் வெளியாவதற்கு முன்பு, டெல்லியில் உள்ள இந்திய விமானப்படை ஆடிட்டோரியத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பல இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.