இன்று லியோ வெற்றிவிழா கொண்டாட்டம்! ரசிகர்களுக்கு இறுதி நேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆகி இருக்கும் நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் வெற்றி விழா இன்று (நவம்பர் 1) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கிறது.
அதன்படி, இந்த விழா நாளை மாலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் தளபதி விஜய் உட்பட சில முக்கிய பிரபலங்கள் கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விழாவில் நடிகர் விஜய் ஏதேனும் குட்டி ஸ்டோரி சொல்லுவாரா என தளபதி ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிருக்கிறார்கள்.
ரசிகர்களுக்கு அனுமதி இல்லை
இந்த வெற்றி விழா நிகழ்ச்சியில் பங்கேற்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போ யாருக்கு தான் அனுமதி என்று பார்க்கையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் விஜய் மாவட்ட தலைவர்கள், மாநகர, நகர, வட்ட, வார்டு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர் அல்லாத ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதாலும், பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 6000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆதார் – பாஸ் முக்கியம்
இந்த வெற்றி விழாவில் பங்கேற்க வருபவர்கள் அனுமதி டிக்கெட் உடன் ஆதாரை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்வும் ஆதார் இல்லை யென்றால் அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ் உடன் ரசிகர் மன்ற அட்டை மற்றும் ஆதார் அட்டை கொண்டு வரும் ரசிகர்கள் இன்று மாலை 4 மணி முதல் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
லியோ வெற்றி விழாவுக்கு வரும் ரசிகர்கள், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விழாவிற்கு வருகை தரும் ரசிகர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
எத்தனை பேருக்கு அனுமதி ?
லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழா வைக்கவில்லை என்ற காரணத்தால் கண்டிப்பாக இந்த வெற்றி விழாவுக்கு வரவேண்டும் என பல ரசிகர்கள் விருப்பம் கொண்டு டிக்கெட்களை புக்கிங் செய்து வருகிறார்கள். இந்த அரங்கத்தில் 6000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. எனவே 6,000 ரசிகர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் மட்டுமே இந்த விழாவிற்கு வருகை தரமுடியும்.
ரஜினி கமல் பங்கேற்பு?
லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவரும், ரஜினியின் அடுத்த படத்தை லோகேஷ் எடுப்பதன் காரணமாக ரஜினியும் “லியோ” படத்தின் வெற்றி விழாவுக்கு வருகை தரவுள்ளதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
அது மட்டுமின்றி கமல்ஹாசனின் குரலில் லியோ படத்தின் இறுதிக்காட்சியில் வந்த காரணத்தால் கமல்ஹாசன் நிச்சியமாக கலந்துகொள்வார் எனவும் தகவல்கள் பரவி கொண்டு இருக்கிறது. ஆனால், ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் இடையே மொதல் போக்கு நிலவி வருவதாலும், கமல் இந்தியன் 2 படப்பிடிப்பில் இருப்பதாலும் நிகழ்ச்சியில் பங்கேற்பது கேள்வி குறி தான் .
எனவே, உண்மையில் யாரெல்லாம் லியோ வெற்றி விழாவில் கலந்துகொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.