மாஸ்டர் பிளான் போட்டு சம்பளத்தை உயர்த்திய விக்ரம்? சூர்யா, தனுஷை மிஞ்சிட்டீங்களே சியான்!
நடிகர் விக்ரம் தான் நடிக்கவுள்ள 62-வது படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம்
தமிழ் சினிமாவில் எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே இறங்கி நடிக்க கூடிய நடிகர் விக்ரம். அந்த வகையில், அவர் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திலும் அவர் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் தான் நடித்திருந்தார். இதனை படத்தின் போஸ்டரை வைத்து பார்க்கையிலே தெரிந்தது.
மாஸ்டர் பிளான்
பொதுவாகவே தமிழ் சினிமாவில் ஒரு நடிகரின் படம் பெரிய அளவில் வெற்றிபெற்றுவிட்டது என்றால் அந்த நடிகர் தன்னுடைய சம்பளத்தை அடுத்த படங்களில் உயர்த்துவது வழக்கம். அப்படி தான் நடிகர் விக்ரம் சரியான ஒரு மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டு அடுத்த படத்திற்கு சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறார்.
விக்ரமிற்கு தங்கலான் படத்தில் நடித்து வந்த சமயத்திலேயே சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், தங்கலான் படத்திற்கு எப்படி வரவேற்பு கிடைக்கிறது என்பதை பார்த்துவிட்டு படங்களில் நடிக்க கமிட் ஆவோம் என்று தான் திட்டமிட்டு இருந்தாராம். அதன்படியே வெளியாவதற்கு முன்பே தங்கலான் படத்திற்கு பெரிய அளவிற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ள காரணத்தாலும் அவர் படத்தை பாதி பார்த்ததால் கண்டிப்பாக படம் பெரிய அளவில் வெற்றிபெறும் என்று எதிர்பார்த்து இருக்கிறாராம்.
சம்பளத்தை உயர்த்திய விக்ரம்
தங்கலான் திரைப்படம் கண்டிப்பாக வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் பேசப்படும் என்ற காரணத்தால் அவர் தான் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார். அதன்படி, அவர் தங்கலான் படத்தை தொடர்ந்து தன்னுடைய 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அந்த திரைப்படத்தை சித்தா படத்தை இயக்கிய இயக்குனர் அருண்குமார் தான் இயக்குகிறார்.
இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ரியா சுபு என்பவர் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் விக்ரம் 50 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம். நடிகர்களின் சம்பளம் ரேசில் பின்னாடி இருந்த விக்ரம் தற்போது சூர்யா, தனுஷ் ஆகியோரை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு சம்பளம் வாங்கியுள்ளாராம். இந்த தகவலை வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. மேலும், சூர்யா தற்போது நடித்து வரும் கங்குவா படத்திற்கு 40 கோடிகள் வரை தான் சம்பளம் வாங்கினார். அதைப்போல தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடிப்பதற்காக 25 கோடி வரை தான் சம்பளம் வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கலான் எப்போது வெளியீடு?
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் இந்த தங்கலான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டீசர் நவம்பர் 1-ஆம் தேதி வெளியாகிறது .