கேரளா குண்டுவெடிப்பு: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு!

Rajeev Chandrasekhar

கேரள மாநிலம் எர்ணாகுளம் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாக வந்த புகாரை அடுத்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று முன்தினம் எர்ணாகுளம் அருகே களமச்சேரியில் உள்ள கிறிஸ்துவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.

இந்த சமயத்தில், கிறிஸ்துவ மத சிறப்பு ஜெபக் கூட்டத்தில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3  இடங்களில் குண்டுகள் வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச காரணம் என்ன? – கருக்கா வினோத் வாக்குமூலம்!

வழிபாட்டுத் தளத்தில் அடுத்தடுத்த வெடித்தது “டிபன் பாக்ஸ் குண்டு” தான் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ‘வெடிகுண்டு வைத்தது நான் தான்’ என்று கூறி கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்டின் என்பவர் கொடக்கராக காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் மார்ட்டின் ரிமோட் செயலி முறையில் எல்இடி வகை வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்ச்சியுள்ளது உறுதியானது. அவர் மீது உபா சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கேரளா முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குண்டு வெடித்த இடத்தில் NIA சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கேரளா வெடி குண்டு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தியா கூட்டணி பலவீனமாக உள்ளது.! ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து.!

சிறும்பான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியல் என பதிவிட்டதாக கூறி கேரள காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாதி, மதம், மொழி உள்ளிட்ட உணர்ச்சியை தூண்டுதல் என்ற பிரிவில் கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக கேரளா காங்கிரஸ் கமிட்டி எக்ஸ் தள பதிவில், களமசேரி குண்டுவெடிப்பு தொடர்பாக அடிப்படையற்ற சர்வதேச சதி கோட்பாடு மற்றும் வெறுப்பு பிரச்சாரத்தை விதைத்த அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது கேரள டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தங்கள் சுயநல அரசியல் ஆதாயங்களுக்காக வெறுப்பை பரப்பும் மற்றும் வகுப்புவாத கலவரத்தை உருவாக்கும் எவரையும் நாங்கள் விடமாட்டோம். நமது மக்களையும், மாநிலத்தில் இணக்கமான சூழலையும் காக்க முழு பலத்துடன் போராடுவோம் என்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA
Coimbatore Tidel Park