டிடிஎப்வாசனுக்கு 4-வது முறையாக காவல் நீட்டிப்பு..!

ttf vasan

டிடிஎப் வாசனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு 4-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

டிடிஎப் வாசன் பைக் சாசகம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு இளைஞர்களை தன் பக்கம் இழுத்தவர். இதற்கிடையில் “மஞ்சள் வீரன்” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். கடந்த மாதம் 17-ம் தேதி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனது  உயர் ரக பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றார். டிடிஎப் வாசன் அதி வேகத்தில் சென்றதால் விபத்து நடந்தாக கூறப்பட்டது. இதுகுறித்த சிசிடிவி வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இதைத்தொடர்ந்து, போலீசார் 5 பிரிவுகளின் கீழ் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்து டிடிஎப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்து காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு டிடிஎப் வாசனுக்கு  ஜாமின் வழங்க முடியாது எனக்கூறி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தில் விபத்தில் தான் காயமடைந்துள்ளதால் சிறையில் உரிய சிகிச்சை பெற முடியவில்லை அதனால் ஜாமீன் வழங்க வேண்டும் என டிடிஎப் வாசன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில்,  டிடிஎப் வாசனின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதைதொர்ந்து, அவர் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் நவம்பர் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு முன் மூன்று முறை டிடிஎப் வாசனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. தற்போது நான்காவது முறையாக நீதிமன்ற காவல்  நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Pahalgam terror attack video
Pahalgam Attack news
Kashmir Attack
america terrorist attack in kashmir
X account suspended
Kashmir to Chennai return