#SLvAFG : ஆப்கானிஸ்தானின் அனல் பந்துவீச்சில் சுருண்ட இலங்கை! டார்கெட் எவ்வளவு தெரியுமா?

SLVSAFG

உலகக்கோப்பை 2023-யின் 30-வது லீக் போட்டியானது இன்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்  இலங்கை அணியும் ஆப்கானிஸ்தான் அணியும்,  மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் கடைசியாக இந்த உலக கோப்பை கிரிக்கெடில் விளையாடிய போட்டியில் வெற்றியை பதிவு செய்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியிலும் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்புடன் இன்று விளையாடி வருகிறது.

அதன்படி, இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்கட்ட ஆட்டக்காரர்கள் பதும் நிஸ்ஸங்க 46, திமுத் கருணாரத்ன 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

அவர்களுக்கு அடுத்த படியாக வந்த குசல் மெண்டிஸ் 39, சதீர சமரவிக்ரம 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். அதன் பின், சரித் அசலங்கா 22, தனஞ்சய டி சில்வா 14, துஷ்மந்த சமீர 1 என ரன்களை அடித்து தங்களுடைய விக்கெட்டுகளை இழந்தனர். ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் மகேஷ் தீக்ஷனா இருவரும்  பொறுமையாக நின்று கொண்டு விளையாடி வந்தனர்.

பிறகு 46-வது ஓவரில் நிதானமாக விளையாடி வந்த மகேஷ் தீக்ஷனா 29 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் வெளியேறிய அடுத்த சில நேரத்திலே ஏஞ்சலோ மேத்யூஸும் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன் பின் களமிறங்கிய கசுன் ராஜித 5 ரன்கள் எடுத்து  ரன் அவுட் ஆனார். இதனால் இறுதியாக 49.3  ஓவர்கள் முடிவில் இலங்கை அணி தன்னுடைய 10 விக்கெட்களையும் இழந்தது.

10 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்களை குவித்தது. பந்துவீச்சை பொறுத்தவரையில் ஃபசல்ஹக் பாரூக்கி 4, முஜீப் உர் ரஹ்மான் 2 , அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான் ஆகியோர்கள் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார்கள். இலங்கை அணி 241 ரன்கள் எடுத்திருக்கும் நிலையில், அடுத்ததாக 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்