அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைப்பு.!
சட்டவிரோத பண பரிவர்த்தனை புகாரின் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்க துறை சோதனை செய்து கடந்த ஜூன் 14ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் பொறுப்பு வகித்து வந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை ஆகிய துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கி கொடுக்கப்பட்டு, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு அறிவித்தது.
இதற்கிடையில், செந்தி பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்திருந்தார் .
ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் பாட்டீல் வீச்சு.! கருக்கா வினோத்திற்கு 3 நாள் போலீஸ் காவல்.!
உடல்நலத்தை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டிருந்த செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மருத்துவ காரணங்கள் கூறி ஜாமீன் வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பு முறையீடு செய்து இருந்தது. இதன் விசாரணை இன்று நீதிபதி அனிருதா போஸ், பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. அடுத்த வாரம் திங்கள் கிழமை நவம்பர் 6ஆம் தேதி அன்று ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.