#SLvAFG : டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு தேர்வு!

AFGvSL

SLvAFG : 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 30-வது லீக் போட்டி இன்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.  இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், இலங்கை அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் இந்த ஆண்டு 5 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் தலா 2 முறையும் இரண்டு அணிகளும் வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் இலங்கை 5-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 7-வது இடத்திலும் இருக்கிறது.

எனவேம் இன்று நடைபெறவிருக்கும் இந்த போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி அற்புதமாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவ செய்தது.  அதைப்போல,ஆப்கானிஸ்தான் அணியும் கடைசியாக பாகிஸ்தான் அணியுடன் மோதிய நிலையில், அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த இரண்டு அணிகளும் கடைசியாக விளையாடிய போட்டியில் வெற்றியை பதிவு செய்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியிலும் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்புடன் இன்று களம் காண்கிறது. இந்நிலையில், இன்று நடைபெறவிருக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.அதன்படி , முதலில் இலங்கை அணி பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

ஆப்கானிஸ்தான் : 

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(c), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ராம் அலிகில்(wk), முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி

இலங்கை : 

பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ்(w/c), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மத்தியூஸ், மஹீஸ் தீக்ஷன, கசுன் ராஜித, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க

மேலும், இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் அணியும், இலங்கை அணியும் 11 முறை உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மோதி இருக்கும் நிலையில், மூன்று முறை ஆப்கானிஸ்தான் அணியும், 7 முறை இலங்கை அணியும் மோதியுள்ளது. ஒரே ஒரு போட்டி மட்டும் சமநிலையில் முடிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்