பட்ஜெட் விலையில் 4 ஜிபி ரேம்..5000mAh பேட்டரி.! விரைவில் அறிமுகமாகும் டெக்னோவின் புதிய மாடல்.?

Tecno Pop 8

Techno Pop 8: டெக்னோ மொபைல் நிறுவனம் அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான டெக்னோ பாப் 7 ப்ரோவை, கடந்த பிப்ரவரி 17ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, டெக்னோ விரைவில் அதன் பாப் சீரிஸில் டெக்னோ பாப் 8 (Techno Pop 8) என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது.

இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் குறித்த தகவலை டிப்ஸ்டர் அன்வின், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் டிஸ்பிளே, பேட்டரி மற்றும் கேமரா அம்சங்களை பகிர்ந்துள்ளதோடு, ஸ்மார்ட்போனின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போனில் சென்டர் பஞ்ச் ஹோல் நாட்ச் உடன் கூடிய 720 × 1612 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.6 இன்ச் அளவிலான எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டைக் கொண்டிருக்கலாம்.

IQOO 12 Series: வந்துவிட்டது புதிய கேம்சேஞ்சர்.! டீசர் வெளியிட்டு அறிமுகத்தை உறுதிப்படுத்திய ஐக்யூ.!

இதற்கு முந்தைய மாடலான டெக்னோ பாப் 7 ப்ரோவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.56 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்பிளே 480 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 120 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட்டையும் கொண்டுள்ளது.

பிராசஸர்

டெக்னோ பாப் 8 ஆனது மாலி ஜி57 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட யூனிசோக் டி606 (UniSoC T606) என்கிற 4ஜி சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் ஒரு 4ஜி போன் ஆகும். அதோடு இதில் கோ டைனமிக் போர்ட் அம்சத்துடன் கூடிய ஆண்ட்ராய்டு 13 உள்ளது. இந்த கோ டைனமிக் போர்ட் என்பது ஆப்பிள் ஐபோனில் இருக்கக்கூடிய பிரத்தியேக டைனமிக் ஐலண்டைப் போன்றது.

கேமரா

இதில் டூயல் ரியர் கேமரா உள்ளது. அதன்படி, டூயல் மைக்ரோ ஸ்லிட் ஃப்ளாஷ்லைட்டுடன் 13 எம்பி மெயின் கேமரா மற்றும் ஏஐ லென்ஸுடன் கூடிய இரண்டாவது கேமரா பொருத்தப்படலாம். செல்ஃபிக்காக 8 எம்பி கேமரா பொருத்தப்படலாம்.

இந்த போனில் சைடு மௌண்டெட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், டிடிஎஸ் ஆடியோவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பு, டூயல் சிம், வைஃபை, புளூடூத் மற்றும் ஜிபிஎஸ் போன்ற அம்சங்களும் உள்ளன.

64 எம்பி கேமரா..5000mAh பேட்டரி.! சீனாவில் அறிமுகமாகும் விவோ ஒய்100 5ஜி..எப்போ தெரியுமா.?

பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்

8.55 மிமீ தடிமன் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 5,000 mAh திறன் கொண்ட பேட்டரி இணைக்கப்படலாம். இதை சார்ஜ் செய்ய 10 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிஸ்டரி வைட், அல்பெங்லோ கோல்ட், மேஜிக் ஸ்கின், கிராவிட்டி பிளாக் ஆகிய நான்கு வண்ணங்களில் வெளியாகலாம்.

இதில் மூன்று வேரியண்ட் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, 3 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ், 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் என உள்ளன. இதில் 4 ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேமும் உள்ளது. இத்தகைய அம்சங்கள் கொண்ட டெக்னோ பாப் 8 ஆனது இந்தியாவில் ரூ.6,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகமாகலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்