தொடர் மழை எதிரொலி: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரவில் இருந்து மழை பெய்து வரும் நிலையில், காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது. இது தவிர மீதமுள்ள 12 மாவட்டங்களுக்கும் இனி கனமழை வெளுத்து வாங்கப்போகிறது. இதனால், மற்ற மாவட்டங்ளுக்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.