இந்த தீபாவளி சரவெடி தான்…கலகலப்பாக கலக்கும் கார்த்தியின் ‘ஜப்பான்’ பட டிரைலர்!
கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவின் போது, படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது படக்குழு.
எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தில் அனு இமானுவேல், இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிபில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால், வியாழன் (நவம்பர் 9) வெளியிட திட்டமிட்ட நிலையில், தயாரிப்பாளர்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக படத்தை நவம்பர் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் கார்த்திக்கு ஜப்பான் 25 திரைப்படம் என்பதால், இன்று (அக்டோபர் 28 ஆம் தேதி) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில், பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவை நடத்தினர். மேலும், இரவு 10 மணிக்கு டிரைலர் வெளியிடுவதாக முன்னதாக அறிவித்திருந்தனர். அதன்படி, அட்டகாசமான ஜப்பான் படத்தின் டிரைலரை தற்போது வெளியிட்டுள்ளனர்.
வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலரை வைத்து பார்க்கையில் படம் பெரிய அளவில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீசரை போலவே டிரைலரில் வரும் காட்சிகள் அனைத்தும் பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாக இருக்கிறது.
“நா ரெடிதா வரவா” லியோ வெற்றிவிழா கொண்டாட வருகிறார் தளபதி விஜய்?
படத்தின் கதை
சில வருடங்களுக்கு முன்னர் திருச்சியில் ஒரு பிரபல நகைக்கடையில் கொள்ளை கும்பல் சுவரைத் துளையிட்டு கிலோ கணக்கினான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது. பின்னர், தமிழக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து சுமார் 10 பேர் கொண்ட அந்த கொள்ளை கும்பலை கைது செய்தனர்.
அர்ஜுன் – தம்பி ராமையா குடும்பம் ஒன்றிணைந்த தருணம்! மகன்-மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்…
எனவே, இந்த சம்பவத்தை வைத்து தான் ஜப்பான் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. உண்மையில் படம் அந்த சம்பவத்தை அடிப்படையாக எடுக்கப்பட்டதா இல்லையா என்பது படம் வெளியான பிறகே தெரிய வரும்.