AUSvNZ : 4வது வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா! நியூசிலாந்து அணி போராடி தோல்வி!

Australia Win

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று 27வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதியது. தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்கி இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா தொடக்க வீரர்களான டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில், அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 67 பந்துகளில் 109 ரன்களும், டேவிட் வார்னர் 65 பந்துகளில் 81 ரன்கள் அடித்து இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.

இதன்பின் வந்த மிட்செல் மார்ஷ் 38 ரன்கள், மேக்ஸ்வெல் 41 ரன்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பின்னர் ஆஸ்திரேலியா அடுத்தடுத்த விக்கெட் இழந்தாலும், வந்த வீரர்கள் அனைவரும்சொற்ப ரன்கள் அடித்தாலும் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தனர். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணியை பொறுத்தவரையில் போல்ட் 3, க்ளென் பிலிப்ஸ் 3, சான்ட்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: மேத்யூ வேட் தலைமையில் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

இதையடுத்து, 389 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. ஆரம்பத்திலேயே தொடக்க ஆட்டக்கார்களான டெவோன் கான்வே 28, வில் யங் 32 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்த நிலையில், டேரில் மிட்செல் மற்றும் ரச்சின் ரவீந்திரன் ஆகியோர் விளையாடி அணியை வெற்றி பாதை நோக்கி அழைத்து சென்றனர். இதில், ரச்சின் ரவீந்திரன் 89 பந்துகளில் 116 ரன்கள் அடித்து அசத்தினார். அதேபோல் மறுபக்கம் நிதானமாக விளையாடிய டேரில் மிட்செல் தனது அரை சத்தை அடித்தார்.

இதனால் வெற்றி இலக்கு நெருங்கி வந்தது. இருப்பினும், இருவரும் விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த வீரர்கள் பெரியளவில் ஜொலிக்கவில்லை. ஆனாலும், நியூசிலாந்தின் போராட்டம் வெற்றி இலக்கை நோக்கி தொடர்ந்தது. அதாவது, 7வது பேட்டராக களமிறங்கிய ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் அதிரடியாக விளையாடி தனது அரை சதத்தை போர்த்தி செய்தார். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ஜேம்ஸ் நீஷம், போல்ட் களத்தில் இருந்தனர். 2 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இரண்டு ரன்கள் ஓட போகி நீஷம் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இறுதி ஒரு பந்தில் வெற்றி பெற 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. இறுதியாக நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 383 ரன்கள் எடுத்தது தோல்வியை சந்தித்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 5  ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரையில் ஆடம் ஜம்பா 3, ஜோஷ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடி விக்கெட்டை இழந்த ஜேம்ஸ் நீஷம் 39 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்தார். இருப்பினும், இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடியது. மேலும்,  உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இரண்டு தோல்விகளுக்கு பிறகு தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இருந்தாலும், புள்ளிபட்டியலில் நியூசிலாந்து அணி 3வது இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 4வது இடத்தில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MS Dhoni OUT
Chennai Super Kings vs Kolkata Knight Riders
mp kanimozhi
Chennai Super Kings vs Kolkata Knight Riders toss
BJP MLA Nainar Nagendran
amitshah about dmk