அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்..! 35 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!
எகிப்தின் பெஹெய்ரா கவர்னரேட்டில் அலெக்ஸாண்ட்ரியா பாலைவன சாலையில் பெஹெய்ராவுக்கு அருகில் பயணித்த காரில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த ரோட்டில் வந்த பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில் வாகனங்கள் தீப்பிடித்து எறிந்துள்ளதுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எகிப்தில் அதிவேகமாகச் செல்வதாலும், சாலைகள் மோசமாக காணப்படுவதாலும், போக்குவரத்துச் சட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தாததாலும் அதிகமான சாலை விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில்,அந்த புகைப்படத்தில், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கிடப்பதையும், கார்கள் பற்றி எரிவதையும் காணலாம்.
????JUST IN: 32 people were killed in a collision between a passenger bus and a number of cars on the Cairo-Alexandria road in Egypt.
Source: Sky News pic.twitter.com/APB3HHUmQ0
— Mario Nawfal (@MarioNawfal) October 28, 2023