எந்த படம் பண்ணலாம்? குழம்பி போய் இருக்கும் நெல்சன்! என்ன செய்ய போகிறார்?

Nelson Dilipkumar

பீஸ்ட் படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்ற காரணத்தால் இயக்குனர் நெல்சன் மீது பெரிய அளவில் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அது அனைத்திற்கும் ரஜினியின் ஜெயிலர் படத்தின் மூலம் பதிலடி கொடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், எதிர்பார்த்ததை போலே ஜெயிலர் படத்தை தரமாக இயக்கி பெரிய வெற்றியை ரஜினிக்கு கொடுத்தார்.

அது மட்டுமின்றி பீஸ்ட் படத்தினால் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்திற்கும் தக்க பதிலடியும் கொடுத்தார். ஜெயிலர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஆனது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் யாரை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நெல்சனுக்கு அடித்த ஜாக்பாட்…இந்த முறை கம்மி! அடுத்த முறை 50 கோடிக்கும் மேல கன்பார்ம்!

ஒரு பக்கம் அவர் தெலுங்கில் ஒரு ஹீரோவை வைத்து படம் செய்ய போகிறார் என்ற தகவலும் ஒரு பக்கம் தனுஷை வைத்து ஒரு திரைப்படத்தை அவர் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் தீயாய் பரவியது. இதனையடுத்து தற்போது நெல்சன் மிகவும் குழப்பத்தில் இருக்கிறாராம். ஏனென்றால், எந்த திரைப்படத்தை இயக்கலாம் என்று தான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறாராம்.

அவருடைய கையில் ஒரு தெலுங்கு படம், மற்றும் தனுஷை வைத்து ஒரு திரைப்படம் கோலமாவு கோகிலா 2 உள்ளிட்ட படங்களுக்கான கதை இருக்கிறதாம். இதில் அவர் தனுஷை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கலாம் என்று தான் தற்போது இருக்கிறாராம். ஏற்கனவே, இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்ற காரணத்தால் படத்தின் கதையையும் தனுஷிடம் நெல்சன் கூறிவிட்டாராம்.

தனுஷ் மற்றும் நெல்சன் இருவரும் இணையும் இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனுஷ் தற்போது தன்னுடைய 50-வது படத்தை இயக்கி அவரே நடித்து வருகிறார். இந்த படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இந்த படத்தை முடித்த பிறகு நெல்சன் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள படத்திற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்