தமிழ்நாடு காவல்துறையில் விஷாகா கமிட்டி இல்லை என்ற தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்!கனிமொழி
தமிழ்நாடு காவல்துறையில், உழைக்கும் மகளிர் பாதுகாப்புக்கான விஷாகா கமிட்டி இல்லை என்ற தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார் .
இது குறித்து அவர் கூறுகையில், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய, காவல்துறையிலேயே விஷாகா கமிட்டி இல்லை என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அரசு அலுவலகங்களிலும், பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் இருக்கத்தான் செய்கிறது.மத்திய அரசு, பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை 2013ம் ஆண்டு செயல்படுத்தியது.
DINASUVADU