டி.ஆர்.எஸ் சர்ச்சை… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! விதியை மாற்ற ஹர்பஜன் சிங் கோரிக்கை!
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பையின் 26-ஆவது லீக் போட்டியில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கி பாகிஸ்தான் அணி, 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 47.2 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 271 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.
பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்திருக்கிறது. இதன் மூலம் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்று உடன் வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், நேற்று நடந்த ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் போட்டியில் முடிவு மறு ஆய்வு முறை (டிஆர்எஸ்) தொடர்பாக பெரும் சர்ச்சை வெடித்தது.
டிஆர்எஸ் முறையில் மோசடி செய்து பாகிஸ்தான் அணிக்கு, ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸனின் விக்கெட்டை பரிசளித்ததாக ஐசிசியை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர். ஒரு சிலர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஏமாற்றியதாகவும், மேலும் சிலர் இந்தியா-பாகிஸ்தான் அரையிறுதிக்கு போட்டிக்காக, பாகிஸ்தானை வெற்றி பெற செய்ய பிசிசிஐ எல்லாவற்றையும் செய்கிறது எனவும் குற்றசாட்டியுள்ளனர்.
ஜெய் ஸ்ரீ ஹனுமான்… நான் கடவுளை நம்புகிறேன்! பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு கேசவ் மகராஜ் பதிவு!
அதாவது, தென்னாபிரிக்கா அணி சேஸிங் செய்யும்போது, 19வது ஓவரில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், உசாமா மிரை பந்துவீச கொண்டு வந்தபோது இந்த டிஆர்எஸ் சம்பவம் நிகழ்ந்தது. உசாமா மிர் ஓவரில் ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் எல்பி டபுள்யூ ஆனார். நடுவர் அதை அவுட் கொடுத்தார். ஆனால், பந்து வெளிய செல்கிறது அதாவது ஸ்லைடு லெக் என்று நினைத்து பேட்டர் ரிவ்யூ எடுத்தார். இருப்பினும், அம்பர்ஸ் கால் என்பதால் அவுட்டானார்.
இருப்பினும், நெட்டிசன்களின் கூற்றுப்படி, பந்து-ட்ராக்கிங் ஆரம்பத்தில் ஸ்டெம்பில் படாமல் பந்து மேலே சென்ற மாதிரி கட்டியதாகவும், பின்னர் ஒளிபரப்பை உடனடியாக மாற்றி மற்றொரு பந்து-ட்ரெக்கிங்கில் ஸ்டேபிள் பந்து சற்று படும் மாதிரியும் கட்டப்பட்டுள்ளது. இது நடுவரின் கால் என்பதால் அவுட் என தெரிவிக்கப்பட்டது. இதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தான் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.
இந்த டிஆர்எஸ் இந்தியாவுக்கு சாதகமாக இருந்திருந்தால், அது கிரிக்கெட்டில் மிகப்பெரிய சர்ச்சையாக இருந்திருக்கும். ஆனால், அது பாகிஸ்தானுக்கு சாதகமாக இருந்தது, இப்போது யார் கவலைப்படுகிறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளனர். மற்றொருவர், இது மேட்ச் பிக்சிங், உலகக் கோப்பை, அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் இருக்கும் என விமர்சித்துள்ளார்.
பாரா ஆசிய விளையாட்டு : 100 பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்… பிரதமர் மோடி உற்சாக வாழ்த்து.!
மேலும், ஐசிசியும் பிசிசிஐயும் டிஆர்எஸ்ஸைக் கையாள்கின்றன, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியை உறுதி செய்யவும், இவை அனைத்தும் அதிக பணம் சம்பாதிப்பதற்காகவும் செய்யப்படுகிறது எனவும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல், அம்பர்ஸ் கால் என்ற விதிமுறை தேவையில்லாத ஒன்று, ஸ்டெம்பில் அடித்தால் அவுட் என்றே இருக்க வேண்டும் என கூறி வருகின்றனர். இருப்பினும், இப்போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்விதான் அடைந்தது.
இதுபோன்று மற்றொரு சம்பவம், இப்போட்டியில் பரபரப்பான இறுதி கட்டத்தில் தென்னாபிரிக்க வீரர் ஷம்சி பேட்டிங் செய்யும்போது ஹரிஸ் ரவூப் பந்தில் எல்பி டபுள்யூ ஆனார். இதற்கு நடுவர் அவுட் இல்லை என்று கூறினார். இருப்பினும், முக்கியமான தருணம் என்பதால் பாகிஸ்தான் அணி ரிவ்யூ எடுத்து. அதில், லெக் ஸ்டெம்பிள் பந்து சற்று பட்டுத்தான் சென்றது என பந்து ட்ராக்கிங்கில் தெரியவந்தது. ஆனால், அம்பர்ஸ் கால் என்பதால் நாட் அவுட் ஆனது.
முன்பே ஆவுட் என்று நடுவர் கொடுத்திருந்தால் தென்னாபிரிக்கா ரிவ்யூ எடுத்திருந்தாலும் அது அவுட் என்ற தான் வந்துருக்கும். ஆனால் நடுவர் நாட் அவுட் என்று கொடுத்தார். இதனால் பாகிஸ்தான் அணி போராட்டத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், இப்போட்டியில் ஏற்பட்ட டிஆர்எஸ் முறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் பதிவில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மோசமான அம்பயரிங் மற்றும் மோசமான விதிகள் காரணமாக பாகிஸ்தானுக்கு தான் இழப்பு.
டிஆர்எஸ்ஸில் ‘அம்பயர் கால்’ விதியை ஐசிசி மாற்ற வேண்டும். பந்து ஸ்டம்பிள் அடித்தால், அது கள நடுவரின் முடிவைப் பொருட்படுத்தாமல் விக்கெட் என்ற முறையில் வெளியேற வேண்டும். அம்பயர் கால் என்பதால் தென்னாப்பிரிக்காவின் இறுதி விக்கெட்டான தப்ரைஸ் ஷம்சி ஆட்டமிழக்காமல் அறிவிக்கப்பட்டார்.
மேலும், ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸனின் விக்கெட் குறித்த பதிவில், என்னைப் பொருத்தவரை அவர் அவுட் ஆகவில்லை.. ஆனால், நடுவர் அவுட் கொடுத்தது, போல் அவுட் கொடுக்க தொழில்நுட்பம் இருந்தது. இல்லையெனில் நடுவர் தவறான முடிவை எடுத்துள்ளார் என குற்றசாட்டியுள்ளார்.எனவே, மோசமான அம்பயரிங் மற்றும் மோசமான விதிகள். இந்த விதியை ஐசிசி மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
god forbid if such DRS was in India’s favour, it would’ve been the biggest controversy in cricket. but it was in Pakistan’s favour, who cares now? pic.twitter.com/Sm5gwmDuKL
— H. (@heyytansh) October 27, 2023
He was not out according to me .. but tech was there to give him out as umpire gave him out.. otherwise umpire would hv looked bad for wrong decision.. they saved the umpire there not the player who could have won the game easily for SA https://t.co/8aZXAWjaZR pic.twitter.com/FMZCZ5MTY2
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 27, 2023