தீவிரவாதிகள் நடமாடும் இடமாக தமிழ்நாடு இருக்கிறது.! எல்.முருகன் பரபரப்பு குற்றசாட்டு.!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் “என் மண் என் மக்கள்” எனும் நடைப்பயணத்தை தமிழக பாஜகவினர் துவங்கி தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். நேற்று நாமக்கல் பகுதியில் “என் மண் என் மக்கள்” நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
நாமக்கல் , குமாரபாளையம் பகுதியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இணைந்து நேற்றைய நடைப்பயணத்தில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தமிழக அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.
திராவிடமாடல் அரசின் ஒரே லட்சியம் இதுதான் – அமைச்சர் உதயநிதி
எல்.முருகன் பேசுகையில், தமிழகத்தில் காவல்துறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தவறாக வழிநடத்துகிறார். கவர்னர் மாளிகை மீதே குண்டு வீசும் அளவுக்கு தமிழகத்தின் நிலைமை இருக்கிறது. தேச துரோகிகளும், தீவிரவாதிகளும் தமிழகத்தில் நடமாடுகிறார்கள் என்று பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.
அதே மேடையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ. அப்போதெல்லாம் தமிழகத்திற்கு இருண்ட காலம் தான். ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகிறது. அனால் இன்னும் திமுக அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.
கடந்த 25ஆம் தேதி, ஆளுநர் மாளிகை வாசல் அருகில் உள்ள பேரிகார்ட் மீது கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் பாட்டில் வீசினார். அவரை சென்னை பெருநகர காவல்துறையினர் கைது செய்தனர். அவர் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் பாட்டில் வீசவில்லை. அவர் எங்கும் தப்பியோடவில்லை. ஆளுநர் மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முற்படவில்லை என தமிழக காவல்துறை சிசிடிவி காட்சிகளை காண்பித்து விளக்கம் அளித்தது என்பது குறிப்பிடதக்கது.