எனக்கு 30 வருஷமா அது தான் துணை! சிகரெட் குடித்தது பற்றி மனம் திறந்த ஷகிலா!

Shakeela Cigarette

நடிகை ஷகிலா ஆரம்ப காலகட்டத்தில் ஆபாசமான படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை கவர்ச்சி நடிகையாக மக்கள் பார்க்கும் காரணத்தால் படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். பிறகு அவருக்கு குக் வித் கோமாளி சீசன் 2-வில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்த நிலையில் அதில் கலந்து கொண்டு சமையல் செய்து அசத்தினார்.

அருமையாக சமையல் செய்து செப்களை ஆச்சார்ய படுத்தியது போல காமெடியான பல விஷயங்கள் செய்து மக்களின் மனதில் இடமும் பிடித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவரை கோமாளியாக கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் தங்களுடைய அம்மா போலவே பாசமாக பழகி கொண்டு அவரை ஷகி மா என அன்புடன் அழைக்க தொடங்கினார்கள்.

இதனை பார்த்த ரசிகர்களும் ஷகி மா என்றே அழைக்க தொடங்கினார்கள். இதனால் ஆபாச நடிகை என்ற பிம்பத்தை மாற்றி ஷகிலாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு நல்ல பெயரை கொடுத்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது.

பாக்கியராஜ் திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் கொடுத்த அந்த ‘கிஃப்ட்’! நெகிழ்ந்து போன பூர்ணிமா!

அது மட்டுமின்றி, பிக் பாஸ் சீசன் 7 தெலுங்கு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது. அதில் கலந்து கொண்ட ஷகிலா ஒரு முறை சிகரெட் குடித்துக்கொண்டு  இருந்தார். அதற்கான பூகிபடமும் மிகவும் வைரலானது. இதனை பார்த்த பலரும் சற்று அதிர்ச்சியாகி ஷகி மாவா இப்படி செய்தார் எனவும் கேள்வி எழுப்பினார்கள். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சிகரெட் குடித்ததற்கு  பெரிய அளவில் பேசப்பட்டது. இதற்கு விமர்சனங்களும் எழுந்தது.

இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் ஷகிலா சிகரெட் குடித்தது பற்றி பேசி உள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் சிகரெட் பிடித்தது அதற்கான ரூமில் சென்று தான் குடித்தேன் அங்கு கேமரா இருந்தது அதனை மறைக்க நான் சொல்லியும் மறைக்கவில்லை பிறகு நான் சிகரெட் குடித்தது வெளிய தெரிந்தது. என்னை பிடித்தவர்களுக்கு நான் அப்படி செய்தது வருத்தமாக இருக்கும்.

நான் அதற்கு இந்த நேரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால், இந்த மாதிரி எல்லாம் அன்பு கிடைப்பதற்கு முன்னாடி ஒரு 30 வருடங்கள் எனக்கு நண்பர், துணையாக இருந்தது இந்த சிகரெட் தான். எனவே அதன் காரணமாகி தான் இந்த சிகரெட்டை நிறுத்தமுடியவில்லை” என நடிகை ஷகிலா தெரிவித்துள்ளார். இவர் இப்படி பேசுவதை பார்த்த ரசிகர்கள் அப்போ நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் அந்த அளவிற்கு தனிமையாக இருந்த காரணத்தால் தான் ஷகிலாவுக்கு புகைபிடிக்கும் பழக்கம் வந்திருக்கும் என கூறி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest