பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்!
சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022 ஜூலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விளம்பர போஸ்டரில் முதல்வர் புகைப்படத்தை அகற்றி பிரதமர் புகைப்படத்தை ஒட்டி விவகாரம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே, கொடிக்கம்பம் விவகாரம் தொடர்பாக நீதிமன்ற காவலில் சிறையில் இருந்த அமர் பிரசாத் ரெட்டியை, நேற்று புகைப்படம் ஒட்டிய விவகாரம் தொடர்பாக கைது செய்தனர்.
அமர் பிரசாத் ரெட்டிக்கு நவம்பர் 10 வரை நீதிமன்ற காவல்!
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது நேரில் ஆஜராக வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.
இதனிடைய, நுங்கப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அதன்படி, நுங்கப்பாக்கத்தில் போக்குவரத்துக்கு போலீசாரிடம் தகராறு செய்த வழக்கில் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு, நவம்பர் 10ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. தற்போது மற்றொரு வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.