நடிகர் அஜித்தா இது? ஆளே மாறி போயிட்டாரே..வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!

AJITH Latest

நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது அஜித் தன்னை சந்திக்க வந்த ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அஜித் வெள்ளை நிற முடியுடன் ஒரு கண் வீக்கம் அடைந்தது போல இருக்கிறார்.

கடைசியாக துணிவு திரைப்படத்தில் மாஸான ஒரு கெட்டப்பில் இருந்த நிலையில், தற்போது க்ளீன் சேவ் செய்து ஆளே மாறி போய் இருக்கிறார். இதனால் இப்போது வெளியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகர் அஜித் குமாரா இது? என்பது போல கேள்வி எழுப்பி வருகிறார்கள். அஜித்தின் இந்த லேட்டஸ்ட் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

AJITH KUMAR Latest
AJITH KUMAR Latest [File Image]

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

மங்காத்தா மாதிரி ஹிட் ஆகணும்! ‘விடாமுயற்சி’ படத்தின் வில்லனை மாற்றிய படக்குழு?

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி அஜர்பைஜான்  நாட்டில் தொடங்கப்பட்டது. இருப்பினும் சில காரணங்களால் இன்னும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதையும், படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதற்கான எந்த அறிவிப்பையும் வெளியாடாமலே லைக்கா நிறுவனம் இருக்கிறது. படப்பிடிப்பில் இருந்து வெளியாகும் புகைப்படங்களை வைத்து தான் படப்பிடிப்பு நடந்து வருவதை ரசிகர்கள் தெரிந்து கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் எந்த மாதிரி ஒரு கெட்டப்பில் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஒரு வேளை இது தான் விடாமுயற்சி படத்தின் ஒரு கெட்டப் -ஓ என கேள்வி எழுப்பி வருகிறார்கள். உண்மையில் அஜித் இந்த திரைப்படத்தில் எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான பிறகு தான் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்