நாடாளுமன்ற தேர்தல் வரையாவது ஆளுநரை மாற்ற வேண்டாம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Tamilnadu CM MK Stalin

சென்னையில் நடைபெற்ற திமுக வழக்கறிஞர் புருஷோத்தம் இல்ல திருமணவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். இந்த திருமணவிழாவில் முன்னின்று மணமக்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.

இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் அவர்கள், பெரிய பெரிய பதவியில், பெரிய மாளிகையில் இருந்து கொண்டு திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறார்கள். இப்படி கேட்பவர்களின் பதவி என்பதே வேஸ்ட். திராவிடம் என்றால் என்ன என்று உங்களை கேட்கவைத்துள்ளது தான் திராவிடம்.

ஆளுநரின் நோக்கம் முறியடிக்கப்படும் – வைகோ

திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறாரே அவரே தொடர்ந்து ஆளுநராக இருக்கட்டும். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் தயவு செய்து இங்குள்ள ஆளுநரை மட்டும் என்றைக்கு மாற்றி விடாதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தல் வரையாவது ஆளுநரை மாற்ற வேண்டாம்.

கடந்த 2 நாட்களாக ஆளுநர் புருடா வீட்டுக் கொண்டிருக்கிறார். ஆளுநர் பேசுவதை மக்கள் பொருட்படுத்தவில்லை. திமுக தேர்தல் நேரத்தில் சொல்லப்பட்ட உறுதி மொழிகளை சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாய், உறுதியாய் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் சூழல் உருவாகியுள்ளது. பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழல் உருவாக்கிக் கொண்டுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், மணமக்களிடம் தங்களுக்கு பிறக்க போகும் குழந்தைக்கு தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்