மேற்கு வங்க வனத்துறை அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் அமலாக்கத்துறையால் கைது.!
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநில ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. மம்தா பேனர்ஜி முதல்வராக உள்ளார். இவரது அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக்.
இவர் முன்னதாக உணவுத்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்தபோது கொரோனா காலத்தில், அரசின் ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் பல கோடி ரூபாய் அளவில் ஊழல் முறைகேடு நடந்ததாக இவர் மீது குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் ரூ.21 கோயில் காணிக்கை.., காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியது என்ன.?
இந்த ஊழல் விவகாரத்தில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையால் வழக்குப்பதிவு செய்யபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் தொடர்புடைய ஒருவர் முன்னதாக விசாரணைக்காக கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து நேற்று காலை முதலே மே.வங்க வனத்துறை அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கின் கொல்கத்தாவில் உள்ள அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறையால் கைது செய்து கொண்டுசெல்லப்படும் போது, ஜோதிப்ரியா மல்லிக் செய்தியாளர்களிடம், “நான் ஒரு தீவிர சதியில் பலியாகிவிட்டேன்.” என கூறினார்.