கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு – இந்தியா அதிர்ச்சி!
கத்தாரில் கைது செய்யப்பட்டு, காவலில் உள்ள 8 இந்தியர்கள் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்த புகாரில் கைதான 8 இந்தியர்களுக்கு மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் விதித்துள்ளது. 8 இந்தியர்களும் பணி புரிந்த நிறுவனம் நீர்முழ்கி கப்பல்கள் தொடர்பான திட்டத்தில் இணைந்திருந்தது.
உளவு பார்த்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள 8 இந்தியர்களும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சமயத்தில், அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார் நீதிமன்றம். இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அல் தஹ்ரா நிறுவனத்தைச் சேர்ந்த 8 இந்திய ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் கத்தாரின் முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதாக எங்களுக்கு முதல் தகவல் கிடைத்துள்ளது.
8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ள கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. விரிவான தீர்ப்பு கிடைத்ததும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 8 பேரின் குடும்ப உறுப்பினர்கள், வழக்கறிஞர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அனைத்து சட்ட விருப்பங்களையும் ஆராய்ந்து வருகிறோம். இந்த வழக்குக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
அதை தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும், தூதரக உதவி மற்றும் சட்ட உதவிகளை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம் என்றும் 8 பேருக்கு விதித்துள்ள மரண தண்டனை தொடர்பாக கத்தார் அரசுடன் பேச இருப்பதாகவும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கின் நடவடிக்கைகள் ரகசியமாக இருப்பதால், இந்த நேரத்தில் மேற்கொண்டு எந்த கருத்தையும் கூறுவது சரியாக இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளது.
Verdict in the case of 8 Indians detained in Qatar: We are deeply shocked by the verdict of death penalty and are awaiting the detailed judgement. We are in touch with the family members and the legal team, and we are exploring all legal options. We attach high importance to this… pic.twitter.com/l6yAg1GoJe
— ANI (@ANI) October 26, 2023