பெட்ரோல் குண்டு வீச்சு! புகாரை பதிய மறுப்பதாக ஆளுநர் மாளிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

GOVERNOR HOUSE

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை 1வது மெயின் கேட் முன்பு உள்ள பேரிகார்ட (தடுப்பு அரண்) அருகில் நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தி இருந்தது. பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்பவரை உடனடியாக கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.!

கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது காவல் துறையினர், வெடிபொருள் தடுப்பு சட்டம், பொது சொத்துக்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது, கடந்த 2022ம் ஆண்டு சென்னை பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் உட்பட மொத்தம் 14 குற்றவழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான புகாரை பதிய மறுப்பதாக ஆளுநர் மாளிகை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதாவது, ராஜபவனின் தாக்குதல் குறித்த ஆளுநர் மாளிகை புகார் அடிப்படையில் போலீஸ் வழக்கு பதியவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை கூறுகையில், ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை.

பெட்ரோல் குண்டு வீச வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி!

போலீஸ் தன்னிச்சையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்து விட்டது. குற்றவாளியை அவசரகதியில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதாகவும் ஆளுநர் மாளிகை புகார் தெரிவித்துள்ளது. நள்ளிரவில் மாஜிஸ்திரேட்டை எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்