பாக்கியராஜ் திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் கொடுத்த அந்த ‘கிஃப்ட்’! நெகிழ்ந்து போன பூர்ணிமா!

poornima bhagyaraj marriage

நடிகர் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் பிரபலங்களுக்கு திருமணம் நடந்தால் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு அவர்களுக்கு மறக்க முடியாத பரிசுகளை கொடுப்பார். இதனை அவரிடம் பரிசு வாங்கியவர்கள் வெளிப்படையாகவே பேசி நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், இயக்குனர் பாக்கியராஜ் திருமணத்தின் போதும் அவரால் மறக்க முடியாத பரிசை கொடுத்துள்ளர்.

இயக்குனர் பாக்கியராஜ் நடிகை பூர்ணிமா பாக்யராஜை கடந்த 1984-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரின் திருமணத்திற்கு எம்ஜிஆருக்கும் அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் வரமாட்டார் என திருமணத்திற்கு வந்தவர்கள் மற்றும் பூர்ணிமா ஆகியோர் நினைத்தார்களாம்.

ஆனால், அனைவர்க்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், எம்.ஜி.ஆர்.திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினாராம். அதன் பிறகு பாக்கியராஜிற்கும் பூர்ணிமாவுக்கும் திருமணமான 5 நாட்களுக்கு பிறகு தான் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றதாம். அதற்கும் எம்ஜிஆர் கலந்து கொண்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தாராம்.

எம்.ஜி.ஆர் கொடுத்த அந்த அசத்தல் ‘கிஃப்ட்’? இன்னும் வைத்திருக்கும் நடிகர் சத்யராஜ்!

அது மட்டுமின்றி அந்த சமயம் விலையுயர்ந்த 2 குத்துவிளக்குகளை திருமண பரிசாகவும் கொடுத்தாராம். ஆனால், அவர் பரிசாக கொடுத்தது குத்துவிளக்கு என்று இரண்டு நாட்களுக்கு பிறகு தான் பாக்கியராஜிற்கும், பூர்ணிமாவுக்கும் தெரியுமாம். ஏனென்றால், எம்.ஜி.ஆர். கூட்டத்தில் வைத்து கொடுக்காமல் நேரடியாக வீட்டிற்கு சென்று கொடுத்தாராம்.

அந்த சமயம் திருமணம் என்பதால் பாக்கியராஜ், பூர்ணிமா இருவருடைய உறவினர்களும் திருமண மண்டபத்தில் இருந்தார்களாம். வீட்டிற்கு சென்று குத்துவிளக்கை பரிசாக கொடுக்கலாம் என எம்ஜிஆர் வீட்டிற்கு சென்று இருந்த நிலையில் அங்கு ஒரு சிறுவன் தான் இருந்தாராம். பிறகு அவனிடம் இதை எம்ஜிஆர் கொடுக்க சொன்னார் பத்திரமாக கொடுத்துவிடு என கூறிவிட்டு சென்றாராம்.

அது மட்டுமில்லாமல் திருமணத்தின் போது திருமணம் என்றால் வீட்டில் ஆள் வைக்கவேண்டாம் என்று ஒன்னுமில்லை வீட்டில் ஆள் வைத்து விட்டு மண்டபத்திற்குள் இருங்கள் யாராவது வீட்டிற்கு கூட செல்வார்கள் என அட்வைஸ்யையும் கொடுத்தாராம். எம்.ஜி.ஆர் கொடுத்த அந்த கிப்ட் வாழ்நாளில் மறக்கவே முடியாத கிப்ட் எனவும் பாக்கியராஜின் மனைவி பூர்ணிமா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்