குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சோம்நாத் சாட்டர்ஜி மறைவு இரங்கல்…!
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சோம்நாத் சாட்டர்ஜி மறைவு குறித்து இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
கொல்கத்தாவில் மக்களவை சோம்நாத் சட்டர்ஜி உடல்நலக்குறைவால் காலமானார்.இவருக்கு வயது 89 ஆகும்.இவர் சோம்நாத் சாட்டர்ஜி சிறந்த வழக்கறிஞர் ஆவார்.மேலும் கடந்த 2004 முதல் 2009ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த போது மக்களவையின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இது குறித்து இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.அதில் சோம்நாத் சாட்டர்ஜி மறைவு மேற்கு வங்கத்துக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கே பேரிழப்பு. நாடாளுமன்றத்தில் சக்திவாய்ந்தவராக திகழ்ந்தவர் சோம்நாத் சாட்டர்ஜி என்று தெரிவித்துள்ளார்.
DINASUVADU