ஓவர் ஹைப் ஏத்தாதீங்க! வெங்கட் பிரபுவுக்கு கண்டிஷன் போட்ட நடிகர் விஜய்?

thalapathy vijay and Venkat Prabhu

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் வசூல் ரீதியாக ஹிட் ஆகி இருக்கும் நிலையில், அடுத்ததாக விஜய் தன்னுடைய 68-வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயிமென்ட்  தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு நடிகர் விஜய் கண்டிஷன் ஒன்றை போட்டு இருக்கிறாம். அது என்னவென்றால், தளபதி 68 படத்தை பெரிய அளவில் ஹைப் கிளப்பி ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளாராம்.

அதற்கு காரணம் லியோ படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி தற்போது படத்திற்கு கிடைத்து வரும் விமர்சனத்தை வைத்து தானாம். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு  படம் மக்களுக்கு பிடிக்காமல் போக கூடாது என்ற காரணத்தால் விஜய் தளபதி 68 படத்திற்கு ஹைப் ஏற்றவேண்டாம் என கூறிவிட்டாராம்.

தம்மாத்தூண்டு ரோலுக்கு அவ்வளவு பெரிய பில்டப்பு! லோகேஷை பங்கமாக கலாய்த்த மன்சூர் அலிகான்!

மற்றோரு காரணம் என்னவென்றால், வெங்கட் பிரபு தான் இயக்கும் படங்களை பற்றி வெளிப்படையாகவே பேசி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி விடுவார் எனவே, இதன் காரணமாகவும் தளபதி 68 படத்தை பற்றி அவர் எந்த ஹைப்பும் ஏற்றக்கூடாது என்ற கண்டிஷனை விஜய் போட்டு இருக்கிறாம்.

விஜய் வெங்கட் பிரபுவுக்கு கண்டிஷன் போட்டுள்ள இந்த தகவலை  ட்ரென்டிங் பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். மேலும், தளபதி 68 படத்திற்கான பூஜை கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற்றது. இந்த பூஜைக்கான வீடியோ மற்றும் படத்தின் அப்டேட்டுகள் லியோ படம் வெளியான பிறகு அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, லியோ படம் வெளியாகி வெற்றி அடைந்த நிலையில், தளபதி 68 படத்திக்கான பூஜை வீடியோவும் நேற்று வெளியானது. அந்த பூஜை வீடியோவில் மோகன், பிரசாந்த்,யோகி பாபு, பிரசாந்த்,பிரபுதேவா, லைலா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், அஜ்மல் அமீர், VTV கணேஷ், யோகி பாபு, பிரேம்ஜி, அஜய் ராஜ் மற்றும் அரவிந்த் ஆகாஷ், வைபவ் உள்ளிட்ட பலர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
PMK MLA Metur Sadhasivam - BJP State president Annamalai
Yashasvi Jaiswal
PM Modi office
US President Donald trump
maruthamalai - murugan vel
tn rain