LeoBoxOffice: 500 கோடியை தாண்டிய ‘லியோ’! ஒரே வாரத்தில் மிரட்டல் சாதனை!
![leo vijay box office](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2023/10/leo-vijay-box-office.jpg)
லியோ திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லியோ
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான “லியோ” திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மன்சூர் அலிகான், கெளதம் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
லியோ வசூல்
லியோ படத்தின் வசூல் அனைவரையும் மிரள வைத்து வருகிறது என்றே கூறலாம். குறிப்பாக படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 148 கோடி வசூல் செய்திருந்தது. அதைப்போல கேரளாவில் மட்டும் முதல் நாளில் 12 கோடி வசூல் செய்திருந்தது. முதல் நாளில் இருந்தே இப்படி தொடர்ச்சியாக படம் வசூலை வாரி குவித்து வருகிறது.
லியோ கொண்டாட்டத்தில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய இயக்குனர் லோகேஷூக்கு காயம்!
மிரள வைத்த ஒரு வார வசூல்
இந்த நிலையில், லியோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், வெளியான ஒரு வாரத்தில் படம் உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வெளியான ஒரு வாரத்தில் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்வது என்பது தமிழ் சினிமாவில் சாதாரண விஷயம் இல்லை அதனை லியோ படம் செய்துள்ளது தமிழ் சினிமாவையே பெருமை படுத்தியுள்ளது.
சாதனைகள்
லியோ திரைப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக விஜயின் சினிமா வாழ்க்கையில் 500 கோடி வசூல் கொடுத்த திரைப்படம் மற்றும் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. அதைப்போல இதுவரை வெளியான தமிழ் படங்களில் முதல் நாளில் உலகம் முழுவதும் அதிக வசூல் செய்த படம் மற்றும் கேரளாவில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)