நீட் எதிர்ப்பு கையெழுத்து.. திமுகவின் நாடகம்.! அண்ணாமலை கடும் விமர்சனம்.! 

BJP State President Annamalai

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், டி.ஆர்.பாலு ஆளுநர் பற்றி விமர்சித்தது, நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து என பல்வேறு அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

டி.ஆர்.பாலு நேற்று ஆளுநர் ரவி பற்றி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து கண்டன அறிக்கையை திமுக சார்பில் வெளியிட்டார். அதில் ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆதரவாக ஆளுநர் ரவி செயல்படுவதாகவும், சுதந்திர போராட்ட வீரர்களை திமுக அரசு பல்வேறு வகைகளில் கௌரவித்துள்ளது என கூறிய கருத்துக்கள் பற்றி அண்ணாமலை கருத்து கூறினார்.

ஆளுநர் விமர்சனம்! உண்மையாக அக்கறை இருந்தால் கோப்புக்கு ஒப்புதல் தர வேண்டும் – அமைச்சர் பொன்முடி

அண்ணாமலை கூறுகையில், இது திமுகவினரின் வரம்பு மீறிய செயல்.  ஆளுநர் தனது வேலைகளை செய்கிறார். அவர் கூறுவதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை ஆராய்ந்து கூறுங்கள். தமிழகத்தில் உள்ள சுதந்திர போராட்ட பட்டியல் கேட்டதற்கு திமுக அரசு 40 பெயர்களை தான் கொடுத்துள்ளது. ஆனால், ஆளுநர் 6000 பேர் இருப்பதாக கூறுகிறார்.

மருதுபாண்டியர்கள் விழாவில் ஆளுநர் பேசியது உண்மை தான். சுதந்திர போராட்ட வீரர்களை சாதிய தலைவர்களாக தான் மாற்றி வைத்துள்ளனர். தென் மாவட்டத்தில் குருபூஜைக்கு  செல்வது கூட எதோ போருக்கு செல்வது போல தான் காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிற்கின்றனர். அந்தளவுக்கு தான் தமிழகத்தில் நிலைமை இருக்கிறது. இதனை குறிப்பிட்டு தான் தமிழகத்தில் இருந்து தேசிய தலைவர்கள் உருவாகவில்லை என்று ஆளுநர் கூறுவதாக அண்ணாமலை குறிப்பிட்டார்.

டி.ஆர்.பாலு தனக்கு அடுத்த முறையும் திமுக எம்பி சீட் தருவார்கள் என நினைக்கிறார்.  ஏற்கனவே அவரது மகன் தமிழக அமைச்சரவையில் இருக்கிறார்.  டி.ஆர்.பாலுவுக்கு வயது 80ஐ கடந்து. விட்டது. அதிக சொத்து சேர்த்து வைத்தற்காக தான், அவருக்கு மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் இரண்டாவது அமைச்சரவையில் மத்திய அமைச்சர் பொறுப்பு தராமல் மறுக்கப்பட்டது என கூறினார்.

அடுத்து நீட் தேர்வு எதிர்ப்புக்கு திமுக கையெழுத்து வாங்குவது பற்றி பற்றி அண்ணாமலை கூறுகையில், நீட் எதிர்ப்புக்கு 50 லட்சம் கையெழுத்து வேண்டும் என்று திமுக கூறுகிறது. அவர்கள் தொண்டர்களே 1.5 கோடி பேர் இருப்பதாக கூறுகிறார்கள். அப்படியென்றால் 50 லட்சம் கையெழுத்தை எப்போதோ வாங்கி இருக்கலாமே. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு கையெழுத்து என்பது திமுகவின் நாடகம்.  கடந்த 2016 முதல் தற்போது வரையிலான 8 வருட நீட் தேர்ச்சி பற்றிய விவரத்தை பார்த்தாலே தெரியும். எத்தனை ஏழை எளிய மாணவர்கள் பலனடைந்துள்ளனர் என்று என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்