மழைக்கால முன்னெச்செரிக்கை : 10,000 மருத்துவ முகாம்கள்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.! 

Minister Ma Subramanian

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ள நேரத்தில் பருவகால நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்த நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

அவர் கூறுகையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 20ஆம் தேதி துவங்கி, 4,5 நாட்களை  கடந்து தற்போது பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. ஒவ்வொரு பருவமழை காலத்தின் போதும், மலேரியா, டெங்கு, சேத்துப்புண், சளி, தொண்டை வலி உள்ளிட்ட மழைக்கால நோய்கள் வருவதும் தவிர்க்க முடியாத ஒன்று.

குறிப்பாக மழைக்கால நோய்களை பரப்பும் நன்னீரில் வளரும் ஏடிஎஸ் கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் டெங்கு பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் 5600 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆயிரம், இரண்டாயிம் டெங்கு பாதிப்புகள் வரலாம்.  தற்போதைய நிலவரப்படி, 490 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் . இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு தமிழகத்தில் டெங்கு பாதிப்பு  13 ஆயிரமாக இருந்தது. 2013ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பு 23 ஆயிரமாக இருந்தது. அதே போல, 2012இல் டெங்கு பாதிப்பால், 64 பேர் உயிரிழந்தனர். 2013இல் 65 இறப்புகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் வரும் 2 ,மாதங்களில் டெங்கு இறப்பு கூடாது என நினைக்கிறோம். தமிழகம் முழுவதும் வரும் 29ஆம் தேதி முதல் அக்டோபர், நவம்பர், டிசம்பர் என மொத்தமுள்ள 10 ஞாயிற்று கிழமைகளில் வாரம் 1000 மருத்துவ முகாம்கள் வீதம் மொத்தமாக  10,000 பருவகால நோய்கள் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்