உங்களுக்கு அடிக்கடி வாய்ப்புண் ஏற்படுகிறதா.? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்.!

Mouth Ulcers

வாய்ப்புண் என்பது பல காரணங்களால் ஏற்படுகிறது. சிலருக்கு வாய்ப்புண் நாள்பட்டதாகவும் உள்ளது. எனவே வாய்ப்புண் ஏன் வருகிறது, சிலருக்கு வாய்ப்புண் மவுத் கேன்சராக வரும் என்ற சந்தேகமும் இருக்கும். மேலும், வீட்டிலேயே அதை எப்படி சரி செய்வது என்பதை பற்றியும் இந்த பதிவில் நாம் வாசிப்போம்.

வாய்ப்புண், தற்காலிகமான வாய்ப்புண் மற்றும் நாள்பட்ட வாய்ப்புண் என உள்ளது. பெரும்பாலான வாய்ப்புண் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் குணமாகும். ஆனால் இந்த நாள்பட்ட வாய்ப்புண் தான் பிரச்சனைக்குரியது. இது பெரும்பாலான காரணங்களால் ஏற்படும். குறிப்பாக இது வயிறு மற்றும் குடல் சம்பந்தமான நோய் இருந்தால் ஏற்படும்.

ஏனென்றால் வாயிலிருந்து ஆசனவாய் வரை ஒரே குழாய் தான். இதன் எதிர் வினையில் தான் வாய்ப்புண் வர காரணமாகிறது. மலச்சிக்கல், பித்த எதுக்களிப்பு, ஜீரணக் கோளாறு ,குடல் புண், சரியாக மலம் கழிக்காமல் சிறு குடலில் ஏற்படும் வெப்பம் கூட வாய்ப்புண்ணாக ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், உணவு எதுக்களிப்பு ஏற்படும்போது ஹைட்ரோ குளோரிக் ஆசிட் வெளிப்படும் மற்றும் இரைப்பையில் ஏற்படும் வெப்பம் நிறைந்த  காற்று மேலே வரும் போது வாய்ப்புண் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் புகையிலை, பாக்கு, குட்கா, மது புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் ஏற்படும். இது தவிர கிருமி தொல்லை மூலமும் ஏற்படும்.

இவ்வாறு புண் இருக்கும் போது இனிப்பு மிகுந்த மிட்டாய்களை சாப்பிட்டால் வாய்ப்புண் அதிகரிக்கும். மேலும், ஏதேனும் மாத்திரை மற்றும் மருந்துகள் அலர்ஜி ஏற்பட்டிருந்தால் கூட வாய்ப்புண் வரும். இந்த வாய்ப்புண் அதிக நாள் இருந்தால் வாய் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும். ஆகவே இவ்வளவு காரணங்கள் இருப்பதால் எதனால் ஏற்படுகிறது என அறிந்து நாம் இந்த குறிப்புகளை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அது வேலை செய்யும்.

  • மணத்தக்காளி கீரை ஒரு கைப்பிடி எடுத்து எண்ணெய் இல்லாமல் வதக்கி அதை மையாக அரைத்து பசும் வெண்ணையில் குழைத்து காலை இரவு நேரங்களில் புண்  உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். ஒரு மணி நேரம் நாம் எதையும் சாப்பிடக்கூடாது தண்ணீரும் அருந்தக்கூடாது.
  • நாட்டு வேல மரம் கொழுந்தை மென்று துப்பி வர வலியின் வீரியம் குறையும் மேலும் அதன் பட்டைகளை இரவு 10 கிராம் ஊறவைத்து அதை காலையில் வாய் கொப்பளித்து வரவேண்டும்.
  • நல்லெண்ணையை காலை நேரங்களில் வாய் கொப்பளித்து வர வெப்பம் குறைந்து வலியும் குறையும்.
  • புதினா நான்கு ஏலக்காய் 2 இவற்றை  கசாயம் செய்து வாய் கொப்பளித்தால் துர்நாற்றம் நீங்கும்.
  • அதிமதுர பொடி அஞ்சு கிராம் தேனில் கலந்து சாப்பிட்டு வரவும். மேலும் பீன்ஸ் மற்றும் பச்சை நிற காய்கறிகளை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் .

இந்த முறைகளை பயன்படுத்தியும் குறையவில்லை என்றால் உடனடியாக நாம் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது கிருமி தொற்று இருந்தால் அதற்கு உண்டான மருந்துகளை அதன் மூலமாக தான் சரியாகும்.

புகையிலை, பாக்கு, குட்கா போன்றவற்றை பயன்படுத்துபவர்களாக இருந்து ஒரே இடத்தில் வாய்ப்புண் ஏற்பட்டால் வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே அதனை நாம் கவனத்தில் கொண்டு மருத்துவரை அணுகி உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.

மேலும் ஒரே இடத்தில் இருக்கும் அந்த வாய்ப்புண்ணில் வழியாக ரத்தம் கசிந்தாலோ அதை நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
NCERT - 7th grade
Vanathi Srinivasan - mk stalin
BBC coverage of Kashmir attack
Tamilnadu CM MK Stalin
tn rain
Kerala CMO bomb threat