இனிமேல் இந்தியாவில் இருந்து இலங்கை செல்ல விசா தேவையில்லை..!
இந்தியாவிலிருந்து இலங்கை செல்ல விசா வேண்டாம் என்று இலங்கை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்தை சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை ஒப்புதல் உடன் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை இந்த சோதனை முயற்சியை இலங்கை தொடங்கியுள்ளது. இதுகுறித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இலவச விசாக்களை மார்ச் 31 ஆம் தேதி வரை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.’ என தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் இந்த அறிவிப்பால், மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இலங்கை செல்லும் பயணிகளுக்கு மிகவும் சந்தோசமான செய்தியாக இருக்கும். கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கிய நிலையில், தற்போது இலங்கை அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.