தவறு இல்லையென்றால் பேருந்துகளை விடுவிக்க நடவடிக்கை – சிவசங்கர்

s. s. sivasankar

தமிழகத்தில் ஆயுதபூஜை, விஜயதசமி விழாக்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஒவ்வொரும் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.  இந்த தருணத்தை பயன்படுத்தி சில பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதுண்டு.

இந்த நிலையில், பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், அதிக கட்டணம் வசூலித்ததாக கூறி, 120 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர்.

அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும்.! தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்

இந்த நிலையில், ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்து இருந்தாக கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் மாறன் அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கும் என்றும், மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் தெரிவித்து  இருந்தார்.

இந்த நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் கூறுகையில், சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளில் தவறுகள் இல்லை என்றால் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்வர்.

வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை இயக்கக் கூடாது என்று   துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து வேலை நிறுத்தம் மாலையில் தொடர்ந்தால் அரசு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
rain update news today
UdhayanidhiStalin
Chennai Super Kings IPL Auction
India won the Test Match
Heavy Rain - cyclone
meena (10) (1)