வாரத்தின் முதல் நாளில் வீழ்ந்த சென்செக்ஸ்.! 800 புள்ளிகளுக்கு மேல் சரிவு.!

SensexFalls

இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, கடந்த சில வாரங்களாக சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. அதன்படி, சென்செக்ஸ் 200 புள்ளிகள் முதல் 350 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகமானது நடைபெற்றது. இருந்தும் இந்த வாரத்திலாவது பங்குச்சந்தை ஏற்றமடையும் என்று முதலீட்டாளர்கள் நினைத்திருந்தனர்.

அதன்படி, பங்குச்சந்தை 2 முதல் 5 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தது. ஆனால் தற்போது சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. அந்தவகையில், இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று 65,419 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், வர்த்தகநாளின் முடிவில் 825.74 புள்ளிகள் சரிந்து 64,571.88 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

அதோடு, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 260.90 புள்ளிகள் உயர்ந்து 19,281.75 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. முந்தைய வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 65,397 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 19,542 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

இவ்வாறு பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைவதற்கு அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது. தற்போது, பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.01 டாலர் விலை குறைந்து 91.15 டாலராக விற்பனையாகி வருகிறது. 

மேலும், சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 126.00 அல்லது 1.71% குறைந்து ரூ.7,240 ஆக விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி இந்தியா, லார்சன் & டூப்ரோ லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன.

இண்டஸ்இண்ட் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன. முன்னதாக நிஃப்டி முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Saifullah Kasuri
cake inside Pakistan High Commission
PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter
Pahalgam terror attack video
Pahalgam Attack news