கலைஞர் சமாதிக்கு அதிகாலை 4 மணிக்கு வந்த நடிகர் விஜய் வைரலாக பரவும் வீடியோ உள்ளே

Default Image

கடந்த 27 ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக, கல்லீரல் பிரச்சினை, மூச்சு சம்மந்தப்பட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11 நாட்களாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது .
பின் கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.ஆகஸ்ட் 8 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் நினைவு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அங்கு பல்வேறு முக்கிய தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பின் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது சமாதிக்கு இரவு பகல் பாராமல் பலவேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் அவரது தொண்டர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்  நடிகை த்ரிஷா ,கார்த்தி போன்ற திரைத்துறையினரும் வந்தவண்ணம் உள்ளனர் .

இதனிடையில் நடிகர் விஜய் அமெரிக்காவில் சர்க்கார் படப்பிடிப்பு சென்றிருந்ததால் அவரால் நல்லடக்கம் செய்த அன்றைக்கு வர இயலவில்லை அவரது மனைவி மற்றும் தந்தை ஆகியோர் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினர் .
கலைஞர் இறப்பை அடுத்து சர்க்கார் படப்பிடிப்பு தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது.அமெரிக்காவிலிருந்து  இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை விமானநிலையத்துக்கு வந்தவுடன் கலைஞர் சமாதிக்கு செல்ல வேண்டும் என்று தனது உதிவியாளர்களிடம் கூறியுள்ளார்.  அங்கு சென்ற அவர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார். இதை அங்கு  இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார், இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது  வைரலாக பரவி வருகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்