ரூ.21,999 பட்ஜெட்டில் பக்காவான 5ஜி ஸ்மார்ட்போன்.! விவோவின் புதிய ஒய்200 5ஜி.!

Vivo Y200 5G: ஸ்மார்ட்போன் பயனர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய புதிய விவோ ஒய்200 5ஜி (Vivo Y200 5G) ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி 16ம் தேதி விவோ ஒய்100 (Vivo Y100) என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. தற்போது அதே ஒய் சீரிஸில் இந்த புதிய விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
டிஸ்பிளே
விவோ ஒய்200 5ஜி ஆனது 2400 × 1080 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.67 இன்ச் (16.94 செ.மீ) எஃப்எச்டி+ அமோலெட் டிஸ்பிளேக் (Full HD+ AMOLED Display) கொண்டுள்ளது. அதோடு 800 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் உள்ளது.
6 ஜிபி ரேம்..5,000 MAh பேட்டரி..50 எம்பி கேமரா.! இந்தியாவில் களமிறங்கும் லாவாவின் புதிய மாடல்.!
ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், அக்சிலரோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்சார், கைரோஸ்கோப், அம்பியன்ட் லைட் சென்சார், எலக்ட்ரானிக் காம்பஸ் போன்ற சென்சார்கள் உள்ளன. விவோ ஒய்100 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் அளவுடைய டிஸ்பிளே உள்ளது.
பிராசஸர்
விவோ ஒய்200 5ஜியில் மாலி-ஜி68 எம்சி4 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட 8 கோர் 6 நானோ பிட் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 ஆக்டா கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையில் இயங்கக்கூடிய ஆண்ட்ராய்டு ஃபன்டச் ஓஎஸ் 13 உள்ளது. குறிப்பாக இது ஒரு 5ஜி மொபைல் ஆகும்.
இ-காம்பஸ், மோட்டார், கைரோஸ்கோப், ப்ராக்ஸிமிட்டி சென்சார், அம்பியண்ட் லைட் சென்சார் போன்ற சென்சார்களும் உள்ளன. இதே ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர் ரெட்மி நோட் 12 5ஜி மற்றும் ஐக்யூ Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனிலும் உள்ளது. விவோ ஒய்100 ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட்டைக் கொண்டுள்ளது.
கேமரா
இதில் பின்புறம் ஆரா லைட்டுடன் கூடிய டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இந்த அமைப்பில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) அம்சம் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா அடங்கும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதில் லைவ் ஃபோட்டோ, டைம் லேப்ஸ், ப்ரோ, பானோ, போர்ட்ரெய்ட், ஸ்லோ மோஷன், விளாக் மூவி, டூயல் வியூ, டபுள் எக்ஸ்போஷர், சூப்பர்மூன், லைவ் ஃபோட்டோ, ஸ்டைல்கள், ஃபில்டர்கள், லைட் எஃபெக்ட் போன்ற கேமரா அம்சங்கள் உள்ளன.
பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்
190 கிராம் எடை மற்றும் 7.69 மிமீ தடிமன் கொண்ட விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போனில் 4800 mAh திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் 19 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய முடியும்.
Big Dussehra Sale: 40% முதல் 90% வரை தள்ளுபடி அறிவித்த பிளிப்கார்ட்.! தசரா திருவிழாவே களைகட்டப்போகுது..!
ஜங்கிள் கிரீன் மற்றும் டெசர்ட் கோல்ட் என்கிற இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள விவோ ஒய்200, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது. அதோடு 8 ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் மற்றும் மெமரி கார்டு மூலம் 2 டிபி வரையிலான ஸ்டோரேஜ் எக்ஸ்பென்டபிள் வசதி உள்ளது.
விலை மற்றும் சலுகை
இந்த விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.21,999 என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி, இன்று (அக்-23) முதல் அக்டோபர் 31ம் தேதி வரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படும். இந்த சலுகை இ-ஸ்டோரில் மட்டுமே செல்லுபடியாகும்.
அதோடு 24 மாதங்கள் வரைக் கட்டணமில்லா இஎம்ஐ வசதி மற்றும் பஜாஜ் இஎம்ஐ கார்டில் ரூ.750 வரை கேஷ்பேக் வழங்கப்படும். விவோ ஒய்200 ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வ விவோ இணையதளம் மற்றும் பிளிப்கார்ட்டில் வாங்கிக்கொள்ளலாம். மேலும், விவோ ஒய் 100 ஸ்மார்ட்போனும் ரூ.21,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
காஷ்மீர் தாக்குதல்: பயங்கரவாதி ஹாசிம் மூஸா முன்னாள் பாரா கமாண்டோ.! அதிர்ச்சி தகவல்..,
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025