6 ஜிபி ரேம்..5,000 mAh பேட்டரி..50 எம்பி கேமரா.! இந்தியாவில் களமிறங்கும் லாவாவின் புதிய மாடல்.!

Lava Blaze 2 5G

Lava Blaze 2 5G: இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான லாவா (LAVA) கடந்த மாதம்  ஸ்டார்ரி நைட் மற்றும் ரேடியன்ட் பேர்ல் நிறங்களில் லாவா பிளேஸ் ப்ரோ என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.12,499 என்கிற விலையில் அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்திய சந்தையில் லாவா பிளேஸ் 2 5ஜி என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

அதன்படி, இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை உறுதிப்படுத்தும் விதமாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் டீசர் ஒன்றை லாவா வெளியிட்டது. இந்த டீசரில் போனின் பின்புற வடிவமைப்பைத் தவிர, அறிமுகத் தேதி மற்றும் ஸ்மார்ட்போனின் விவரங்கள் குறித்த வேறு எந்தத் தகவலையும் லாவா வெளியிடவில்லை.

இருப்பினும் டிஸ்பிளே, பிராசஸர், கேமரா குறித்த  சில விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

அடுத்த அறிமுகத்திற்கு தயாராகும் ஒப்போ.! எந்த மாடல்.. எப்போ வெளியீடு தெரியுமா.?

டிஸ்பிளே

இதில் லாவா பிளேஸ் ப்ரோவில் இருக்கும் பஞ்ச்-ஹோல் கட்அவுட் கொண்ட 6.78 இன்ச் ஐபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய எஃப்எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே ஆனது, லாவா பிளேஸ் 2 5ஜி போனில் இருக்கலாம். அதோடு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டையும் கொண்டிருக்கலாம்.

பிராசஸர்

லாவா பிளேஸ் 2 5ஜியில் மாலி ஜி57 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6020 பிராசஸர் பொருத்தப்படலாம். இதில் ஆண்ட்ராய்டு 13 அடைப்படையில் இயங்கக்கூடிய ஓஎஸ் உள்ளது. லாவா பிளேஸ் ப்ரோவில் மாலி-ஜி57 எம்பி2 இணைப்பில் ஆக்டா-கோர் டைமன்சிட்டி 6020 பிராசஸர் உள்ளது.

Vivo Y200 5G: 64எம்பி கேமரா..5000 MAh பேட்டரி.! அசத்தல் அம்சங்களுடன் விவோவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்.!

கேமரா மற்றும் பேட்டரி

லாவா வெளியிட்டுள்ள டீசரில் ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா அமைப்பு வட்ட வடிவில் இருக்கும். அதன்படி, 50 எம்பி கொண்ட மெயின் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா இருக்கலாம். அதோடு 5,000 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படலாம். பேட்டரி திறன் உறுதியாக தெரியவில்லை. இதை சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட்டுடன் கூடிய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கலாம்.

ஸ்டோரேஜ்

வரவிருக்கும் பிளேஸ் சீரிஸ் ஸ்மார்ட்போனான லாவா பிளேஸ் 2 5ஜியில் இரண்டு வேரியண்ட்கள் விற்பனைக்கு வரலாம். அதன்படி இதில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட் ஆறுமுக செய்யப்படலாம். இதில் 4ஜிபி ரேம் வேரியண்ட்டில் 4ஜிபி விர்ச்சுவல் ரேம் உள்ளது.

அதே போல 6ஜிபி வேரியண்ட்டில் 6ஜிபி விர்ச்சுவல் ரேம் இருக்கலாம். இந்த தகவல்கள் அனைத்தும் லாவா நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்