#9YearsOfKaththi : இரட்டை வேடங்களில் கலக்கிய விஜய்! ‘கத்தி’ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் பலருடைய ஃபேவரட்டாக இருக்கிறது. ஆனால் விஜய் ரசிகர்களை தாண்டி அனைவர்க்கும் மிகவும் பிடித்த திரைப்படம் எதுவென்றால் ‘கத்தி ‘திரைப்படம் என்று கூறலாம். இந்த திரைப்படம் அந்த அளவிற்கு அருமையான திரைப்படமாக இருந்தது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட்டானது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருப்பார். படத்தில் நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். படத்தில் இதுவரை நடிக்காத அளவிற்கு எமோஷனலான காட்சிகளில் நடித்திருப்பார்.
இந்த திரைபடத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு ஏ ஆர் முருகதாஸின் கதை எந்த அளவிற்கு காரணமாக அமைந்ததோ. அதேபோல படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆனது என்றே கூறலாம். குறிப்பாக படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி கோலிவுட்டை அதிர வைத்தது என்றே கூறலாம். இன்று வரை தமிழ் சினிமாவில் இது போல ஒரு மோஷன் போஸ்டர் வந்ததும் இல்லை என்றும் கூறலாம்.
லியோ 1000 கோடியை தொடாது! தயாரிப்பாளர் சொன்ன தகவலை கேட்டு ஷாக்கான விஜய் ரசிகர்கள்!
மோஷன் போஸ்டரில் வரும் அனிருத் பின்னணி இசை பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும், இந்த திரைப்படத்தின் ஹிட் ஆல்பத்தை கொடுத்ததற்காக நடிகர் விஜய் அனிருத்துக்கு பியானோ ஒன்றையும் பரிசாக கொடுத்திருந்தார். இந்த நிலையில், இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிறது.
இந்த நிலையில் படத்தின் பட்ஜெட் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் விவரம் குறித்த தகவலை பார்ப்போம் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பல நாட்கள் திரையரங்குகளில் ஓடி உலகம் முழுவதும் 120 கோடி வரை வசூல் செய்தது அந்த சமயம் விஜய்க்கு பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது. ஏனென்றால் விஜய்க்கு துப்பாக்கி படத்திற்கு பிறகு 100 கோடி படத்தை கொடுத்த திரைப்படம் இது தான். இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் அவருக்கு புலி திரைப்படம் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.