முகமது நபி குறித்து சர்ச்சை கருத்து.! சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ மீண்டும் கட்சியில் சேர்ப்பு.!
![Telangana BJP MLA T Raja singh](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2023/10/Telangana-BJP-MLA-T-Raja-singh.jpg)
தெலுங்கானாவில் கடந்த 2018 சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 118 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. இதில் பாஜக சார்பில் கோஷாமஹால் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் டி.ராஜா சிங் மட்டுமே வெற்றிபெற்று இருந்தார்.
தெலுங்கானாவில் உள்ள ஒரே ஒரு பாஜக எம்எல்ஏவான டி.ராஜா சிங், சில மாதங்களுக்கு முன்னர் முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து பாஜக தலைமை இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து டி.ராஜா சிங் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யபட்டார்.
சிறந்த நிர்வாகி அமித்ஷா ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்… பிரதமர் மோடி பதிவு.!
இதனை தொடர்ந்து ராஜா சிங் , காங்கிரஸ் அல்லது ஆளும் பிஆர்எஸ் கட்சியில் சேர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை முற்றிலுமாக மறுத்து இருந்தார். மேலும், தனக்கு கட்சி மீண்டும் வாய்ப்பு தரும். மீண்டும் கோஷாமஹால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என கூறியிருந்தார்.
வரும் நவம்பர் 30ஆம் தேதி தெலுங்கானாவில் தேர்தல் வரவுள்ளதால் பிரதான கட்சிகள் தங்கள் கட்சியை மாநில அளவில் பலப்படுத்தி வரும் வேளையில், பாஜக தலைமை , சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.ராஜா சிங்கை மீண்டும் கட்சியில் சேர்த்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் அவர் உரிய விளக்கம் அளித்துள்ள காரணத்தால் டி.ராஜா சிங் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக, பாஜக ஒழுங்கு குழு செயலர் ஓம் பகத் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)