#INDvsNZ : டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்தியா!

INDvsNZ toss

உலகக்கோப்பை 2023-யின் 21-வது லீக் போட்டி இன்று  தர்மஷாலா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகிறது. இதற்கு முன்னதாக இந்த இரண்டு அணிகளும்  9 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் நியூசிலாந்து அணி 5 முறையும்,  இந்தியா 3 முறையும் வென்றுள்ளது. 1 லீக்போட்டி மழையால் கைவிடப்பட்டது.

அது மட்டுமின்றி, இரு அணிகளும் கடைசியாக 2019 உலகக்கோப்பையின் அரையிறுதியில் சந்தித்தது. இப்போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது இதனால் இறுதிப்போட்டிக்கு இந்தியாவால் முன்னேறமுடியவில்லை.  அதே சமயம் இதுவரை 20 ஆண்டுகளாக உலக கோப்பை தொடர்களில் நியூசிலாந்து  அணியை இந்திய அணி வீழ்த்தியதே இல்லை.

கடைசியாக 2003 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்தை இந்தியா வென்றிருந்தது.  அதன் பிறகு நடந்த எந்த ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி நியூசிலாந்து  அணியை வெல்லவே இல்லை. எனவே, இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது.

இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய  அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்திய அணி : 

ரோஹித் சர்மா(c), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்(wk), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்

நியூசிலாந்து அணி :  

டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம்(w/c), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்

இன்றைய போட்டியில் இந்திய அணியில் சூர்யகுமார் மற்றும் ஷமி அணியில் இடம் பெற்றுள்ளார்கள்.  கடைசியாக இந்திய அணி பங்களாதேஷ் அணியுடன் மோதிய போட்டியில் ஷமிக்கு பதிலாக ஷார்துல் தாகூர் இடம்பெற்று இருந்தார். இதனையடுத்து இன்று நடைபெறவிருக்கும் இந்த போட்டியில் ஷார்துல் தாகூருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷமி களமிறங்கியுள்ளார். அதைப்போல, ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூர்யகுமார் அணியில் இணைந்துள்ளார்.

மேலும், இந்த இரண்டு அணிகளும் இந்த ஆண்டு (2023)  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அருமையான பார்மில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால், இந்த இரண்டு அணிகளும் இதுவரை 4 போட்டிகள் விளையாடி இருக்கும் நிலையில், 4 போட்டியிலும் வெற்றி பெற்று இருக்கிறது.

எனவே, இன்று நடைபெறும் போட்டியில் எந்த அணி வெற்றிபெறுகிறதோ அந்த அணி புள்ளி விவரபட்டியலில் முதலிடத்தில் இருக்கும். ஏற்கனவே நியூசிலாந்து அணி தான் முதல் இடத்தில் இருக்கிறது ஏனென்றால், அந்த அணி இந்தியாவை  விட ரன்ரேட் அடிப்படையில் அதிகமாக உள்ள காரணத்தால் முதல் இடத்தில் இருக்கிறது. ஒரு வேளை இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் புள்ளி விவர பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்