சிறந்த நிர்வாகி அமித்ஷா ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்… பிரதமர் மோடி பதிவு.!

PM Modi - Union Minister Amit shah

1980களில் இந்துத்துவா அமைப்பான ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கமான RSS பிரிவில் தன்னை இணைத்து கொண்டு, அதன் பிறகு பாஜகவில் பல்வேறு அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை நிர்வகித்து, 1989இல் அகமதாபாத் பாஜக நகர செயலாளராக பொறுப்பேற்றார் அமித் ஷா. அதன் பிறகு 1997இல் குஜராத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதன் முதலாக எம்எல்ஏ ஆனவர் அமித்ஷா.

இதுவரை 4 முறை எம்எல்ஏவாகவும், அடுத்து குஜராத் மாநில முதல்வராக பிரதமர் நரேந்திர மோடி இருந்த போது பல்வேறு துறைக அமைச்சராக பொறுப்பேற்று, அதன் பிறகு பாஜக தேசிய செயலாளர், தேசிய தலைவர் என பொறுப்பேற்று 2014 மற்றும் 2019 என இரு நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பெரும்பங்காற்றியவர் அமித்ஷா.

ராஜஸ்தான் தேர்தல்: காங்கிரஸ், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அதன் பிறகு 2019இல் காந்திநகர் பகுதியில் வெற்றி பெற்று தற்போது மத்திய உள்துறை அமைச்சராகவும், பாஜக முக்கிய தலைவராகவும் பொறுப்பில் இருக்கும் பாஜகவினர் மத்தியில் அரசியல் சாணக்கியராக அறியப்படும் அமித்ஷா இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வரும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், அமித்ஷா ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் ஏழைகளின் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதில் அவர் ஆர்வமாக உள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்துவதற்கும், கூட்டுறவுத் துறையை மேம்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து, சிறந்த நிர்வாகியாக முத்திரை பதித்துள்ளார் அமித்ஷா. பாஜகவை வலுப்படுத்துவதில் அவரது பங்கு பாராட்டத்தக்கது. அவர் நீண்ட ஆயுளுடனும், அற்புதமான ஆரோக்கியத்துடனும் வாழ்த்துகிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
empuraan controversy - kerla hc
Rohit sharma - MS Dhoni
japan megaquake
BJP State president K Annamalai
Heavy rains
ed chennai high court